சிஎஸ்கேவில் இருந்து விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி டிவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்(40) தற்போது அணியில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார். சிஎஸ்கே உடனான இவரது ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பை ஹர்பஜன் வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 2021 ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கி விட்டது.
இந்நிலையில் சில அணிகள் நன்றாக விளையாட தங்களுடைய வீரர்களை விலக்குவதையும் இப்போதே ஆரம்பித்து விட்டன. மேலும் தேவைப்படும் கிரிக்கெட் வீரர்களை வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏலம் எடுப்பதும் தொடங்கிவிடும் எனக் கூறப்படுகிறது. ஹர்பஜன் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்த்தார். தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை எனவும் ஹர்பஜன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் வரும் 2021 ஐபிஎல் போட்டிகளுக்கான அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த பட்டியலில் ஹர்பஜன் சிங்கின் பெயர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஹர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணியுடனான தனது ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. அதனால் அணியில் இருந்து விலகுகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் வெளியிட்டு உள்ள தனது டிவிட்டர் பதிவில், “சிஎஸ்கே உடனான என் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்த அணிக்கு ஆடியது ஒரு பேரனுபவம். அழகான நினைவுகள்… வரும் ஆண்டுகளில் நான் இனிமையாக நினைத்துப் பார்க்கும் நட்புகளை இங்கு வளர்த்துக் கொண்டேன். அனைவருக்கும் நன்றி. சென்னை ரசிகர்களுக்கும் நன்றி. வொண்டர்ஃபுல் 2 ஆண்டுகள். ஆல் த பெஸ்ட்” என பதிவிட்டு உள்ளார்.
முன்னணி கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவரை சிஎஸ்கே அணி அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜலந்தரை சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் ஒரு நட்சத்திர வீரராகவே வலம் வந்தார். தனது 160 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஒரு போட்டியில் 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தது இவரது சிறப்பான பந்து வீச்சாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்பிங் பவுலரான இவரை மற்ற அணிகள் 2021 ஐபிஎல் போட்டிக்காக ஏலத்தில் எடுக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்து உள்ளது.
As my contract comes to an end with @ChennaiIPL, playing for this team was a great experience..beautiful memories made &some great friends which I will remember fondly for years to come..Thank you @ChennaiIPL, management, staff and fans for a wonderful 2years.. All the best..??
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments