நீங்கள் ஒரு சினிமா துறவி: விஜய்சேதுபதியை பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்!

வாரத்திற்கு மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை ஒரு சினிமா துறவி என கிரிக்கெட் பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ ’துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் இந்த வாரம் ‘அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் ஸ்னீக்பிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டதற்கு விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடித்தவரும் கிரிக்கெட் பிரபலமான ஹர்பஜன்சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சேது ஜி விஜய்சேதுபதி ரொம்ப நன்றி. ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி. உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா. பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி! என்று பதிவு செய்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

நீட் விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றம்… எதிர்க்கட்சி ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

மருத்துவப் படிப்புக்கு (MBBS) எழுத வேண்டிய நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் “நீட் விலக்கு சட்ட முன்வடிவு“

ரோட்டுக்கடையில் டிபன் சாப்பிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்: வைரல் வீடியோ!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் சாலையோரத்தில் இருந்த கூரை கடை ஒன்றில் டிபன் சாப்பிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களுக்கு அதாவது உரிய ஏழைகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி

12 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைந்த பிரபல நடிகர்: வைரல் புகைப்படம்!

அஜித் நடித்த 'ஏகன்' என்ற திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் 12 ஆண்டுகளுக்குப் பின் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்காகத் தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அளவான 30% இடஒதுக்கீடு இனி 40%