தோல்விகள் காணாத வீரனே இல்லை: சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன்சிங்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஹர்திக் பட்டேலின் ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு காரணமாக சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் சென்னை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தபின்னரும் தமிழில் ஆவேசமான டுவீட்டுக்களை பதிவு செய்து வரும் சிஎஸ்கே அணியின் ஹர்பஜன்சிங், நேற்றைய தோல்வி குறித்தும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை. மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial #Yellove' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்பஜனின் இந்த டுவீட்டுக்கு பெரும்பாலானோர் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியால் துவண்டிருக்கும் நேரத்தில் ஹர்பஜன்சிங் டுவீட், ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக தெரிகிறது.
அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial #Yellove
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com