தோல்விகள் காணாத வீரனே இல்லை: சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன்சிங்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஹர்திக் பட்டேலின் ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு காரணமாக சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் சென்னை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தபின்னரும் தமிழில் ஆவேசமான டுவீட்டுக்களை பதிவு செய்து வரும் சிஎஸ்கே அணியின் ஹர்பஜன்சிங், நேற்றைய தோல்வி குறித்தும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை. மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL தோல்வியின்றி வரலாறா @CSKFansOfficial #Yellove' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜனின் இந்த டுவீட்டுக்கு பெரும்பாலானோர் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியால் துவண்டிருக்கும் நேரத்தில் ஹர்பஜன்சிங் டுவீட், ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக தெரிகிறது.

More News

சிவகார்த்திகேயன் கேட்ட முதல் கேள்வி: 'Mr.லோக்கல்' அனுபவம் குறித்து எம்.ராஜேஷ்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி முடித்துள்ள ''Mr.லோக்கல்'' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில்

வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில்

அஜித், விஜய் வளர்ச்சிக்கு இது ஒன்றே காரணம்: விவேக்

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக வெற்றிகரமான காமெடி நடிகராக தொடர்ந்து வரும் நடிகர் விவேக்,

பப்ஜி விளையாட அனுமதிக்காததால் தூக்கில் தொங்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

பப்ஜி விளையாட்டால் பல இளைஞர்கள், சிறுவர்கள் அடிமையாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

பொன்னியின் செல்வன்: யார் யாருக்கு எந்த கேரக்டர்?

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் திரைப்படமாக்க முயன்றபோதிலும் அது நிறைவேறவில்லை.