நான் வந்துட்டேன்னு சொல்லு: தமிழில் டுவீட் போட்ட பிரபல சிஎஸ்கே வீரர்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்துவிட்டால், தமிழ் ரசிகர்களின் பாசமழைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிந்ததே. இதற்கு நல்ல உதாரணம் தல தோனி

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் புதியதாக இடம்பிடித்திருப்பவர் பஞ்சாபை சேர்ந்த பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங். சென்னை அணியில் இடம்பிடித்தவுடனே தமிழில் டுவீட் போட்டு ஏற்கனவே அசத்தியது தெரிந்ததே

இந்த நிலையில் ஹர்பஜன்சிங் 'சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பட வசனமான நான் வந்துட்டேன்னு சொல்லு' என்ற வசனத்துடன் ஒரு அட்டகாசமான டுவீட்டை தமிழில் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

நான் வந்துட்டேன்னு சொல்லு தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, வீரமா, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே மெர்சலாகுது தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

அனேகமாக இந்த ஐபிஎல் முடிவதற்குள் உண்மையான தமிழராக ஹர்பஜன் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை