இந்த பெண்ணின் வெற்றி நமக்கு ஒரு பாடம்: கோமதி சாதனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று, தான் பிறந்த கிராமத்திற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடி தந்தார். அவரது ஷூ குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவருக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன்சிங், தமிழகத்தின் தங்கமகளுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை, உதவ ஒருவரும் இல்லை. ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக்கதை நமக்கு ஒரு பாடம். நம்பிக்கை வெற்றியோடு வரும், ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு கோமதி மாரிமுத்து ஒரு சாட்சி. வாழ்த்துக்கள் கோமதி, நீங்கள் இந்த நாட்டின் பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றீர்கள் என்று கூறியுள்ளார்.
பசித்த வயிறு.பணமில்லா வாழ்க்கை.உதவ ஒருவரும் இல்லை.ஆனால் இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம்.நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி..Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation pic.twitter.com/nKonTRZHm6
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com