இந்த பெண்ணின் வெற்றி நமக்கு ஒரு பாடம்: கோமதி சாதனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று, தான் பிறந்த கிராமத்திற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடி தந்தார். அவரது ஷூ குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவருக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன்சிங், தமிழகத்தின் தங்கமகளுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை, உதவ ஒருவரும் இல்லை. ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக்கதை நமக்கு ஒரு பாடம். நம்பிக்கை வெற்றியோடு வரும், ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு கோமதி மாரிமுத்து ஒரு சாட்சி. வாழ்த்துக்கள் கோமதி, நீங்கள் இந்த நாட்டின் பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றீர்கள் என்று கூறியுள்ளார்.

More News

தேர்ச்சி பெற்றது தெரியாமல், தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி! 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்

'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்

தளபதி விஜய்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பலர் தீவிர ரசிகர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு என்பதும் தெரிந்ததே.

போலீஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.