ஜிவி பிரகாஷ் பட டைட்டிலை வெளியிடும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷின் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் வெளியிடவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
செந்தமிழை சுழற்றி பேசுபவர் என்றும், களத்தில் சிங்கம் போல் இருப்பவர் என்றும், அவரை பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அனேகமாக அவர் ஹர்பஜன்சிங் ஆக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஹர்பஜன்சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பின்னர் டுவிட்டரில் செந்தமிழில் புகுந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தின் நாயகியாக திவ்யபாரதி என்ற மாடல் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் ஃபர்ஸ்ட்லுக்கில் தெரிய வரும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தெரிகிறது.
Senthamizhai suzhatri pesubavar! Avar yar? ??#AFF7FirstLookTomorrow
— DG (@gdinesh111) September 10, 2019
@gvprakash @AxessFilm @dir_Sathish @Dili_AFF @divyabarti2801 @gopiprasannaa @k_pooranesh @sanlokesh @Donechannel1 @UptownIdeas pic.twitter.com/k2LsVLQO2q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments