தமிழ் மக்களின் அளவு கடந்த பாசம் வியக்க வைக்கிறது: ஹர்பஜான்சிங் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் கம்பீரமாக மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் புகவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இதைபோலவே சிஎஸ்கே அணியில் உள்ள பிற மாநிலத்தவர்களும், பிற நாட்டை சேர்ந்த வீரர்களும் தமிழில் டுவீட் செய்து கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற முதல் நாளில் இருந்தே தமிழில் டுவீட் செய்து வரும் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங், சற்றுமுன் தமிழர்களின் அளவு கடந்த பாசம் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே .இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும் ஹர்பஜன் தன்னை பற்றி குறிப்பிடுகையில், நான் சரியானவன் அல்ல. சில நேரங்களில் முட்டாள் தனமான செய்திகளும் சொல்வது உண்டு. தேவை அற்ற நேரங்களில் சிரிப்பதும் உண்டு. சற்று வேடிக்கையானவன் தான். ஆனாலும் நிறம் மாறுவது இல்லை. என்னை விரும்பினாலும் வெறுத்தாலும் .நான் ஒரு சத்தியம் செய்கிறேன் நான் உங்களை விரும்புகிறேன் அருமை' என்று கூறியுள்ளார். ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

More News

மது சிகரெட் போல் காபியிலும் எச்சரிக்கை வாசகங்கள்: நீதிமன்றம் உத்தரவு

மது மற்றும் சிகரெட் தயாரிப்புகளில் உடல் நலத்திற்கு தீங்கு என்னும் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல் காபி பொருட்களிலும் எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் இணைகிறாரா தளபதி விஜய்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி சேர்ந்த யுவன்ஷங்கர்ராஜா

ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைப்பது கோலிவுட் திரையுலகில் புதியது அல்ல. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, எம்.எஸ்,விஸ்வநாதன் - இளையராஜா, போன்றோர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

தேசிய கட்சிகளுக்கு கூஜா தூக்கும் தமிழ் கட்சிகள்: நடிகை கஸ்தூரி

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதற்கு முழுக்க முழுக்க கர்நாடக மாநில தேர்தல் தான் காரணம் என்பது தெரிந்ததே.

கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தை கையில் எடுத்துள்ள சுசீந்திரன்

கபடியை மையமாக வைத்து 'வெண்ணிலா கபடிகுழு மற்றும் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்