'நோட்டா' நாயகனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
அர்ஜுன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'நோட்டா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதிரடி அரசியல் திரைப்படமான இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் நாளை சென்னை உள்பட பல நகரங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படவுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக 'நோட்டா' படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் விஜய் தேவரகொண்டா, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோவை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது சமூக வலைத்தளத்தில் 'நோட்டா' நாயகன் விஜய் தேவரகொண்டாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்' என்று தமிழில் டுவீட் செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதில் இருந்தே ஹர்பஜன்சிங் பல டுவீட்டுக்களை தமிழில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் @TheDeverakonda @put_chutney @StudioGreen2 pic.twitter.com/mmHiluQXCs
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 4, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com