'டிக்கிலோனா' படத்தில் ஹர்பஜன்சிங் கேரக்டர்: தமிழில் டுவிட் செய்து அசத்தல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்தானம் நடித்துள்ள ’டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தமிழில் தெரிவித்துள்ளதுடன் புதிய புகைப்படத்தின் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
முதல் முறையாக மூன்று வித்தியாசமான கேரக்டரில் சந்தானம் நடித்திருக்கும் ’டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன்சிங் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவர் ஹாக்கி வீரராக நடித்துள்ளார் என அவர் சற்று முன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதில் இருந்து தெரிய வந்துள்ளது.
சர்தேவ் சிங் என்ற ஹாக்கி விளையாட்டு வீரராக தான் நடித்துள்ளதாகவும் சந்தானமும் ஆக்கி வீரராக நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஹர்பஜன் சிங் தமிழில் செய்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா சந்தானம் ஜீ.எப்பிடி இருக்கீங்க. டிக்கிலோனா படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!. படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க’
கார்த்திக் யோகி என்பவர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானம், அனைகா, ஷிரின் காஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா @iamsanthanam ஜீ.எப்பிடி இருக்கீங்க.#Dikkilona படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!.படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க #DikkiloonaFromSep10@kjr_studios @SoldiersFactory @ZEE5Tamil @karthikyogitw @ImSaravanan_P pic.twitter.com/WBxGRcsBe0
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments