'டிக்கிலோனா' படத்தில் ஹர்பஜன்சிங் கேரக்டர்: தமிழில் டுவிட் செய்து அசத்தல்!

சந்தானம் நடித்துள்ள ’டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தமிழில் தெரிவித்துள்ளதுடன் புதிய புகைப்படத்தின் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

முதல் முறையாக மூன்று வித்தியாசமான கேரக்டரில் சந்தானம் நடித்திருக்கும் ’டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன்சிங் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவர் ஹாக்கி வீரராக நடித்துள்ளார் என அவர் சற்று முன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதில் இருந்து தெரிய வந்துள்ளது.

சர்தேவ் சிங் என்ற ஹாக்கி விளையாட்டு வீரராக தான் நடித்துள்ளதாகவும் சந்தானமும் ஆக்கி வீரராக நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஹர்பஜன் சிங் தமிழில் செய்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா சந்தானம் ஜீ.எப்பிடி இருக்கீங்க. டிக்கிலோனா படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!. படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க’

கார்த்திக் யோகி என்பவர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானம், அனைகா, ஷிரின் காஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாஸ்கோ டூ சென்னை: நேரடி விமானத்தில் கிளம்பிய தல அஜித்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகவும் அங்கு ஒரு சில அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டு

சன்னிலியோனின் தமிழ் திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் ரிலீஸ்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஏற்கனவே 'வடகறி' என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி 'வீரமாதேவி' என்ற தமிழ் திரைப்படத்தில்

படப்பிடிப்புக்கு இடையே நாகூர் தர்காவிற்கு விசிட் அடித்த பிரபல தமிழ் நடிகர்!

பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான “மாப்பிள்ளை” படத்தில் அறிமுகமானவர்

தமிழக முதல்வரை பாராட்டிய அண்ணன் - தம்பி நடிகர்கள்: வைரல் புகைப்படம்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அண்ணன், தம்பி நடிகர்கள் அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பின் நடந்த சந்திப்பு: ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினார் சசிகலா!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் காலமான நிலையில் பல அரசியல் பிரமுகர்கள்