யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது.. வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன்சிங் கடந்த சில நாட்களாகவே தமிழில் டுவீட் போட்டு அசத்தி வருகிறார். நேற்றைய வெற்றிக்கு பின் அவர் ஜல்லிக்கட்டு காளையை ஒப்பிட்டு இந்த வெற்றி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
வாடிவாசல் தெறந்தவங்க கிட்டயே வரிஞ்சுக்கற்றதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது..! மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான்.
@rcbtweets " நம் @chennaiipl மனைஹே பண்ணி குரு!! பந்தே இல்ல நீவு எஸ்ட்டு தின ஆய்த்து பேஹ பா மகா " நீ நொறுக்கு பங்கு.. என்று பதிவு செய்துள்ளார். ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com