close
Choose your channels

'சூப்பர் டீலக்ஸ்' பாணியில் சிஎஸ்கே வெற்றியை டுவீட் செய்த ஹர்பஜன்சிங்

Monday, April 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தல தோனியின் அதிரடியான 75 ரன்களும், கடைசி ஓவரை அற்புதமாக வீசிய பிராவோ பந்துவீச்சும் சேர்ந்து சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே டுவிட்டரில் கலக்கி வந்த ஹர்பஜன்சிங் இந்த வெற்றி குறித்து குறிப்பிடும்போது, '''ஒரு நாள் ஒரு டீமை ஏழு டீம் துரத்த அந்த டீம் தடையைத் தாண்டி @msdhoni புடிச்சி தொங்க ,அந்த #தல மேட்ச்ல அடி வெளுக்க, என்னடா இழவு வாழ்க்கைன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேட்ச்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி'' என்று சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலரில் விஜய்சேதுபதி வசனம் பேசியது போல் டுவீட் செய்துள்ளார் ஹர்பஜன்சிங்.

அதேபோல் இந்த வெற்றி குறித்து சேவாக் தனது டுவிட்டரில், 'தோனி விசில் போடவில்லை... விசில் போடு... விசில் போடு என்று குறிப்பிட்டுள்ளார். இது ரொம்ப, ரொம்ப நல்ல விஷயம் என்று பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment