போயிறுவியா என் ஏரியாவ தாண்டி: சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன்சிங் 

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 203 என்ற இலக்கை விரட்டியடித்து வெற்றி பெற்ற சென்னை அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆரம்பத்தில் வாட்சனும், இறுதியில் பில்லிங்கும் கொல்கத்தா பந்துவீச்சை பிரித்து மேய்ந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றியை அடுத்து அந்த அணியின் ஹர்பஜன்சிங் தமிழில் போட்ட ஒரு டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. அந்த டுவீட்டில் அவர் கூறியதாவது

மெட்ராஸ்ல இருக்குது கிண்டி
நீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டி
நீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி
@chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ
போயிறுவியா என் ஏரியாவ தாண்டி 
செம மேட்ச் மாமா

இவ்வாறு ஹர்பஜன்சிங் தமிழில் டுவீட் செய்துள்ளார். சென்னை அணியில் இடம்பெற்றதில் இருந்தே ஹர்பஜன்சிங் அவ்வப்போது தமிழில் டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சீமான் அவர்களே நீங்கள் செய்வது தவறு! தாக்கப்பட்ட தோனி ரசிகர் ஆவேசம்

சென்னை மற்றும் கொல்கத்தா அணியின் ஐபிஎல் போட்டியை பார்க்க வந்த தோனியின் தீவிர ரசிகர் சரவணன், தனது உடல் முழுவதும் மஞ்சள் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் தோனி என்ற எழுத்துடன் போட்டியை பார்க்க சென்றார்.

தோனி மகளுடன் போஸ் கொடுத்த ஷாருக்கான்

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் போட்டி முடியும் வரை மைதானத்தில் போட்டியை ரசித்து பார்த்தார்.

சென்னை - கொல்கத்தா போட்டியின் சில சுவாரஸ்யங்கள்

சென்னை அணியின் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர்கள்

அந்த நாலுபேர் தான் எல்லாத்துக்கும் காரணம்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி

சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.