'ஜெயிச்சிருச்சு மாறா': சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தமிழில் ட்விட் போட்ட ஹர்பஜன் சிங்

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

’கிரிக்கெட் மீது நீங்க வச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்ததை அடுத்து அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் இந்திய சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தபோது, அவ்வப்போது தமிழில் பதிவுகள் செய்து தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது தெரிந்தது.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்திற்கு வாழ்த்து தெரிவித்து, தமிழில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியது:

என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு. கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா

ஏற்கனவே லப்பர் பந்து ' படத்தை கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டிய நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் தங்கள் கதாபாத்திரங்களில் போட்டி போட்டு நடித்துள்ள நிலையில், இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியிருந்தார் .