தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன்சிங்

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் இன்று பெங்களூரில் நட்ந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வினை மிஸ் செய்தது. அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் அள்ளிக்கொண்டது

இந்த நிலையில் அஸ்வினுக்கு பதிலாக சென்னை அணியில் இணைகிறார் ஹர்பஜன்சிங். இவரை சென்னை அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் சென்னை அணியில் இணைந்துள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தமிழில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு' என்று கூரியுள்ளார்.

இதுவரை சென்னை அணியில் உள்ள வீரர்களின் நிலை:

தோனி
சுரேஷ் ரெய்னா
ஜடேஜா
டூபிளசிஸ்
ஹர்பஜன்
பிராவோ