ஐபிஎல் போட்டியை வரவேற்க 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போடாதே பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளதை அடுத்து வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகின்றனர் அந்த வகையில் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியை வரவேற்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஹர்பஜன்சிங், தமிழில் டுவிட்டுக்களை பதிவு செய்து அசத்தி வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2021 coming ?? @jatinsapru @StarSportsIndia @IPL how’s the josh ?? pic.twitter.com/6Tq0zD1Cdp
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments