அஜித் வசனம், ரஜினி நடனம்: மாஸ் காட்டிய ஹர்பஜன்சிங்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும், அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் பதிவு செய்யும் தமிழ் டுவீட்டுக்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்பது தெரிந்ததே! அந்த வகையில் நேற்று டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி துவம்சம் செய்தது. இதனையடுத்து நேற்றைய வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் பதிவு செய்த டுவீட்டில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' படம் வசனமும், ரஜினியின் டான்ஸ் புகைப்படமும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹர்பஜன்சிங் டுவீட் இதுதான்: இஞ்யார்ரா, பேரு சிஎஸ்கே, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து ஐபிஎல்ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் ஃபேன்ஸ்! நாங்களும் தயார்! என்று பதிவு செய்துள்ளார்.
இதேபோல் இம்ரான் தாஹிர் பதிவு செய்துள்ள டுவீட்டில், 'சில பேரு செஞ்சிட்டு சொல்றாங்க. நாங்க செய்யறதும் தெரியாது, சொல்றதும் தெரியாது. எல்லாரும் எதிர்பார்க்கறத நாங்க செய்ய மாட்டோம். நாங்க செய்யப்போறது என்னன்னு யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. எடுடா வண்டிய, போடுடா விசிலை என்று பதிவு செய்துள்ளார்.
இஞ்யார்ரா, பேரு @chennaiipl, ஊறு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு #தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து @IPL ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் fans! நாங்களும் தயார்! Thanks for the super support, @CSKFansOfficial! #WhistlePodu #Yellove pic.twitter.com/zQrxFSfXZa
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 1, 2019
Sila peru senjuttu solranga.Nanga @ChennaiIPL seiyyarathum theriyathu solrathum theriyathu.Yellarum yethir pakkaratha nanga seiyyamattom.Nanga seiyya porathu yennanu yaarum yethir pakkavum mudiyathu #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) May 1, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com