யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் நேற்று மாலை நடந்த அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் பிரபலங்களும் சிலர் தங்களுடைய இரங்கல் செய்தியை குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் ஹர்பஜன்சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் விவேக் குறித்து கூறியுள்ளனர்.
ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உங்களை எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்..பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது: மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும். திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளை கொண்டு சேர்த்த ஒரு லெஜெண்ட். தனிப்பட்ட முறையில் எனக்கு ’மின்னலே’ மற்றும் ’ரன்’ ஆகியப் படங்கள் மிகவும் பிடிக்கும். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
உங்களை @Actor_Vivek எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்..பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும் #Vivek #RIPVivekSir
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 17, 2021
மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும்
— DK (@DineshKarthik) April 17, 2021
A legend who drove social messages through his humour in the https://t.co/uQc5sF7vwD personal favourites being MINNALE and RUN amongst others.May his soul rest in peace pic.twitter.com/KRQ7FEf3oG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com