நீங்க வேற லெவல் மாஸ்: சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த ஹர்பஜன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. இதனால் சிஎஸ்கே அணிக்கு சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பும், சொந்த மண்ணின் ரசிகர்களின் ஆதரவை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
ஆனால் சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ரசிகர்கள் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்து இன்று புனேவுக்கு கிளம்பியுள்ளனர். சுமார் 1000 பேர் சென்ற அந்த சிறப்பு ரயிலில் சென்னை அணியின் கொடிகள், சென்னை அணியின் மஞ்சள் நிற உடைகளாக தோற்றமளித்தன. எனவே நாளை புனேவில் நடைபெறவிருக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி தன் சொந்த மண்ணில் விளையாடும் உணர்வை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழில் டுவீட் போட்டு அசத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன்சிங் இதுகுறித்து சற்றுமுன் பதிவு செய்த டுவீட்டில் கூறியதாவது: பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா' என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என திருக்குறளையும் அவர் மேற்காட்டியுள்ளார். இதைவிட சிஎஸ்கே ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?
பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL@CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready pic.twitter.com/SV9dDBUTnG
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 19, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments