கண்கலங்கி விடை பெறுகிறேன்: ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சென்னை அணி கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை நன்றாக விளையாடி ஆட்டத்தை தனது கையில் வைத்திருந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய மலிங்கா ஆட்டத்தின் திருப்புமுனையாகி கோப்பையை மும்பை கைப்பற்ற பேருதவியாக இருந்தார். வாட்சனின் ரன் அவுட், தாக்கூரின் எல்.பில்டபிள்யூ அவுட் சிஎஸ்கே அணிக்கு துரதிஷ்டமாக அமைந்தது.

இந்த நிலையில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒவ்வொரு போட்டிக்கு பின் சமூக வலைத்தளத்தில் தமிழில் பதிவு செய்யும் ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் நேற்றைய தோல்விக்கு பின் உருக்கமாக டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டில், 'தமிழ் மக்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டரில், ''என் இனிய தமிழ் மக்களே! விடை பெறுகிறேன் இங்கிருந்து, உங்கள் உள்ளங்களில் இருந்து. அன்பு, தோழமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என் உடன் பிறப்புகளே நன்றி! வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.. என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன். நில்லாமல் இருக்கட்டும் விசில், எடுடா வண்டிய ... போடுடா விசிலை' என்று பதிவு செய்துள்ளார்.