சறுக்குனாலும் யானை யானைதான்: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்
- IndiaGlitz, [Saturday,May 11 2019]
நேற்று விசாகப்பட்டணம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணியை சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்றைய வெற்றி சிஎஸ்கே அணியின் 100வது வெற்றி ஆகும். அதுமட்டுமின்றி ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் நான்காவது முறையாக மோதுகின்றன
இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் தமிழில் டுவிட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அவர் பதிவு செய்த டுவீட்டில், 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் சிஎஸ்கே அணியின் இன்னொரு சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் தனது டுவிட்டரில் 'பில்லா 2' படத்தில் அஜித் பேசிய வசனத்தின் பாணியில், 'எங்களோட வாழ்க்கைல ஒவ்வொரு ஐபிஎல்-ம், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பாலும் நாங்களா செதுக்கினதுடா, எடுடா வண்டியை போடுடா விசிலை என்று பதிவு செய்துள்ளார்.
இந்த இரண்டு டுவீட்டுக்களும் சிஎஸ்கே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK pic.twitter.com/UxLfDY8w4o
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 10, 2019
Yengaloda @ChennaiIPL vazhkaila ovvoru ipl m , ovvoru match m , ovvoru over m yen ovvoru ball m nangala sethukinathu da #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) May 10, 2019