சட்டையை மாற்றினாலும் பாம்பு பாம்புதான்: ஜூலி குறித்து ஆர்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் பார்வையாளர்களால் அதிகளவு வெறுக்கப்பட்ட ஜூலி மீண்டும் ரீஎண்ட்ரி ஆனது ஏற்கனவே தள்ளாடி கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ளது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தவர்களில் 10% பேர் கூட தற்போது பார்ப்பார்களா? என்பது சந்தேகமே!
இந்த நிலையில் ஜூலி என்னதான் திருந்தி வந்துள்ளதாக கூறினாலும் அவரது குணத்தில் சிறிதுகூட மாறுபாடு தெரியவில்லை என்பது அவரது செயல்களில் இருந்து தெரியவருகிறது. நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல ஜூலி வாயையும் கட்டுப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது.
இந்த நிலையில் இன்றைய புரமோவில் ஜூலி குறித்து ஆர்த்தி கூறியபோது, 'சட்டையை மாற்றினாலும் பாம்பு, பாம்புதான் என்று கூறியுள்ளார். முன்னதாக ஜூலி ஹரீஷிடம் 'பரணியும் ஓவியாவும் வெளியே போனதற்கு நானும் ஒரு முக்கிய காரணமாக இருந்ததாக எனக்கு மனதில் பட்டதால் ரொம்ப வருத்தப்பட்டேன்' என்று அடுத்த பொய்யை கூற அதை ஹரிஷ் அப்பாவியாக நம்பி கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
#VivoBiggBoss இல் இன்று..@Vivo_India #BiggBossTamil pic.twitter.com/benAAmUo98
— Vijay Television (@vijaytelevision) September 1, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com