close
Choose your channels

ஹரஹர மகாதேவகி: அடல்ட் படத்திற்கு கிடைத்த அசத்தலான ஓப்பனிங்

Monday, October 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த 'ஹரஹர மகாதேவகி' படம் இளைஞர்களின் படம் என்றும் அடல்ட் காமெடி படம் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தமிழகம் முழுவதும் அசத்தலான ஓப்பனிங் வசூலை பெற்று வருகிறது. குறிப்பாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் இளைஞர்களை இந்த படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் 12 திரையரங்க வளாகங்களில் 132 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.43,39,631 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு திரையரங்கில் 95% ரசிகர்கள் குவிந்திருப்பது ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ள இந்த படத்தின் வசூல் வரும் வாரமும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment