close
Choose your channels

ஆயுதபூஜை படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'ஹரஹர மகாதேவகி'

Monday, October 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மாதம் ஆயுதபூஜை தினத்தில் பெரிய பட்ஜெட் படமான ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்துடன் சின்ன பட்ஜெட் படமான 'ஹரஹர மகாதேவகி' படமும் ரிலீஸ் ஆனது.

அடல்ட் காமெடி படமாக இருந்தாலும் இளைஞர்களின் பேராதரவு இந்த படத்திற்கு இருந்ததால் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி வெற்றி பெற்று ஆயுதபூஜை படங்களின் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது

இந்த படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் 15 திரையரங்களில் 164 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.24,65,392 வசூல் செய்துள்ளது. மேலும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 15 வரை சென்னையில் இந்த படம் ரூ.1,77,60,908 வசூல் செய்து தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

மேலும் தமிழக அளவில் இந்த படம் கடந்த 17 நாட்களில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.1.8 கோடி, செங்கல்பட்டில் ரூ.3.7 கோடி, கோவையில் ரூ.3 கோடி என வசூல் செய்து ஆயுதபூஜை படங்களின் பிளாக்பஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment