ரஜினி-லதா தம்பதிக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் லதா அவர்களும் 36 வருடங்களுக்கு முன் அதாவது கடந்த 1981ஆம் ஆண்டு இல்வாழ்க்கையில் இணைந்த நாள் இன்று. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது ஒரு ரசிகையாக கல்லூரி இதழ் ஒன்றுக்காக ரஜினியை பேட்டியெடுக்க சென்ற லதா, அவரிடம் மனதை பறிகொடுத்து பின்னர் வாழ்க்கையிலும் இணைந்த நாள் இன்று.
1981ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திருப்பதியில் ரஜினி-லதா திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் இருப்பதும் இருவருமே திரைத்துறையில் உள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இன்று திருமண நாள் கொண்டாடும் ஆதர்ஷ தம்பதியான ரஜினிகாந்த்-லதா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் நல்ல வளமுடன் வாழ இந்த நாளில் நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments