அனைத்து தாய்மைக்கும் அன்னையர் தின அன்பான வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Saturday,May 11 2024]
அன்னையர் தினம் என்பது சமுதாயத்தில் ஒரு தனிநபரின் தாய்,தாய்மை ,தாய்வழி சமூகம் மேலும் எல்லா தாய்மார்களையும் போற்றும் மற்றும் வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.இது உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் நாள் ஆகும்.20ஆம் நூற்றாண்டின் முன்பில் இருந்தே இதை வழக்கமாக கொண்டுள்ளது நம் சமூகம் .
உனக்கு அம்மான்னா பிடிக்குமா?யாருக்கு தான் அம்மான்னா பிடிக்காது! நாய் பூனைக்கு கூட தான் அம்மான்னா பிடிக்கும் என நடிகர் தனுஷ் கூறும் வசனத்திற்கேற்ப ,யாராலும் எப்போதும் வெறுக்க முடியாத வெறுக்கவும் நினைக்க முடியாத ஒரு கௌரவ கதாபாத்திரத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடைசி நொடி வரையிலும் வாழும் ஒவ்வொரு அம்மாவிற்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
சுயநலமே இல்லாத உருவாய் துளியும் வெறுப்பை காட்டாத முகமாய் தன்னிலை மறந்த தன்னிகரற்ற தாய்மைக்கு தர அல்லது கொடுக்க நினைப்பது தான் என்னவோ ?பெரிதாக ஒன்றும் இல்லை.
அலட்சியமாக நடத்தாமல் ,சுய மரியாதையை இகழ்த்தாமல்,முன்னுரிமை தராமல் ,வேதனைப்படுத்தி பார்க்காமல் ,வளர்ந்ததும் நன்றி கடன் மறக்காமல் ,அயலார் சொல் கேட்டு ஆணவத்தில் ஆடாமல் ,கொடுமை படுத்தாமல் இதற்கெல்லாம் மேல் இறுதியாக முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் இந்த வையகத்திற்கு நம்மை வரவேற்த்த மங்கையை மனம் நிறைந்து பார்த்து கொண்டாலே போதும்.
கருவிலே நெழிந்த நேர்த்தியான நாட்களை எண்ணாத மனிதர்களே இருக்கமாட்டார்.அப்படிப்பட்ட பூஞ்சோலையில் பூவாக நம்மை சுமந்து,உயிர் சொட்டும் வலியை தாங்கி தொப்புள்கொடியை அறுத்து பெத்தெடுத்து வளர்த்து ,என்ன தேவையோ அதை கொடுத்து ,இந்த சமுதாயத்தில் நம்மை தலை நிமிர வைத்த, வாழ்நாள் போற்றும் நாயகியை வாழ்த்த வயது இல்லை என்பதால் போற்றி வணங்குகிறோம் .