விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Monday, August 29, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர் என பன்முகத்துடன் கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் விஷால் இன்று தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஜி.கே.ரெட்டி என்ற பெரிய தயாரிப்பாளரின் மகன் என்ற பின்புலத்துடன் கோலிவுட்டில் 'செல்லமே' என்ற படத்தில் அறிமுகமான நடிகர் விஷாலுக்கு 'சண்டக்கோழி' என்ற இரண்டாவது படமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. லிங்குசாமியின் இயக்கத்தில் கிராமிய பின்னணியில் உருவாகிய விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட அந்த படம், விஷாலுக்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.
இதன் பின்னர் 'திமிறு' நல்ல வரவேற்பை பெற்றதால் கோலிவுட்டின் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்தார். ஹரி இயக்கத்தில் 'தாமிரபரணி, பாலா இயக்கத்தில் 'அவன் இவன், திரு இயக்கத்தில் தீராத விளையாட்டு பிள்ளை, சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டிய நாடு, பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' ஆகியவை விஷாலின் குறிப்பிடத்தக்க வெற்றி படங்கள் ஆகும்.
நடிகர் சங்கம் என்றாலே சீனியர் நடிகர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்ற நடைமுறையை மாற்றி இளைஞர்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் விஷால். நாசர் என்ற அனுபவமுள்ள தலைவரின் கீழ் திறமையான இளைஞர் பட்டாளங்கள் அடங்கிய நடிகர் சங்கம் தற்போது பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நலிந்த நடிகர்கள் மட்டுமின்றி கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும், உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட விஷால், பல பள்ளிக்குழந்தைகளின் கல்விக்கண்ணை திறந்துள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்புக்கு எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் என்னென்ன வசதிகள் இல்லையோ அந்த வசதியை தனது அறக்கட்டளை மூலம் நிறைவேற்றி தருகிறார்.
விஷாலின் திரையுலக பணியும், சமூக பணியும் மென்மேலும் சிறக்க இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து கூறிக்கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment