சின்னத்தல' விராத் கோஹ்லிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் உலகின் தல' தோனி என்றால் சின்னத்தல' விராத் கோஹ்லி என்று கூறலாம். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், இந்திய அணியின் ரன் மிஷினாகவும் உள்ள விராத் கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள். இந்த இனிய பிறந்த நாளில் அவர் மேலும் பல்வேறு வெற்றிகளை குவித்து சாதனைகள் ஏற்படுத்த IndiaGlitz வாழ்த்துகிறது
ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள் போட்டியில் நம்பன் ஒன் இடத்தில் உள்ள விராத் கோஹ்லி, கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் களம் புகுந்தார். அன்று முதல் இன்று வரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்
59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோஹ்லி இதுவரி 4616 ரன்களும், 202 ஒருநாள் போட்டிகளில் 9030 ரன்களும், 50 டி-20 போட்டிகளில் 1830 ரன்களும் குவித்துள்ள விராத் கோஹ்லி மூன்று வகை போட்டிகளிலும் 50% சராசரி பேட்டிங் சதவிகிதத்தை வைத்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறப்பட்ட நிலையில் அவரது சாதனையை விராத் மட்டுமே முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நல்ல பேட்ஸ்மேனாக மட்டுமின்றி நல்ல கேப்டனாகவும் செயல்பட்டு வரும் விராத் கோஹ்லி, அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தல தோனியின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் சின்னத்தல' விராத்கோஹ்லிக்கு மீண்டும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments