சின்னத்தல' விராத் கோஹ்லிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Sunday,November 05 2017]

கிரிக்கெட் உலகின் தல' தோனி என்றால் சின்னத்தல' விராத் கோஹ்லி என்று கூறலாம். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், இந்திய அணியின் ரன் மிஷினாகவும் உள்ள விராத் கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள். இந்த இனிய பிறந்த நாளில் அவர் மேலும் பல்வேறு வெற்றிகளை குவித்து சாதனைகள் ஏற்படுத்த IndiaGlitz  வாழ்த்துகிறது

ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள் போட்டியில் நம்பன் ஒன் இடத்தில் உள்ள விராத் கோஹ்லி, கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் களம் புகுந்தார். அன்று முதல் இன்று வரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்

59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோஹ்லி இதுவரி 4616 ரன்களும், 202 ஒருநாள் போட்டிகளில் 9030 ரன்களும், 50 டி-20 போட்டிகளில் 1830 ரன்களும் குவித்துள்ள விராத் கோஹ்லி மூன்று வகை போட்டிகளிலும் 50% சராசரி பேட்டிங் சதவிகிதத்தை வைத்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறப்பட்ட நிலையில் அவரது சாதனையை விராத் மட்டுமே முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நல்ல பேட்ஸ்மேனாக மட்டுமின்றி நல்ல கேப்டனாகவும் செயல்பட்டு வரும் விராத் கோஹ்லி, அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தல தோனியின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் சின்னத்தல' விராத்கோஹ்லிக்கு மீண்டும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

கமல்ஹாசனுக்கு ஆதரவாக களம் இறங்கிய கேரள முதல்வர்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருந்தார். வழக்கம் போல் இந்து அமைப்புகளும் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

வெங்கட்பிரபுவின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை 28, மங்காத்தா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பாஜக உதவியை நாடும் உதயநிதி: தட்டிக்கழித்த ஹெச்.ராஜா

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா புண்ணியத்தில் சூப்பர் ஹிட்டாகி தற்போது ரூ.200 கோடிக்கும் மேல் வசூலையும் பெற்றுவிட்டது

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' திரை முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தபோதிலும் தன்னுடைய உழைப்பால் முன்னேறி வருபவர்.

திமுக, அதிமுக செய்யாததை செய்து காட்டிய சின்ன கிராமம்

ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போது வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதும், வயல்களில் உள்ள பயிர்கள் அழிவதும், மழை நின்ற ஒருசில மாதங்களில் குடிதண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை கையேந்தும்