close
Choose your channels

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் படிப்படியாக உழைப்பால் முன்னேறி இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறியுள்ள மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

தனுஷின் 'புதுப்பேட்டை' படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு சிறு கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி பின்னாளில் தனுஷ் நிறுவனம் தயாரித்த படமான 'நானும் ரெளடிதான்' படத்தில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு படிப்படியாக தன்னை உயர்த்தி கொண்டார்.

இராஜபாளையத்தில் பிறந்து கணக்காளராக பணிபுரிந்த விஜய்சேதுபதி கூத்துப்பட்டறையில்  முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று குறும்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். சீனுராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று விஜய்சேதுபதிக்கு திருப்புமுனையை தந்த படம் என்றால் மிகையாகாது. அதன் பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும் ஜிகர்தண்டா ஆகிய படங்கள் விஜய்சேதுபதியை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு அழைத்து சென்றது

விஜய்சேதுபதி வயதான கேரக்டரில் நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' அவருடைய நடிப்பின் இன்னொரு பரிணாமத்தை வெளிக்காட்டியது. மேலும் நயன்தாராவுடன் அவர் நடித்த 'நானும் ரெளடிதான்' சூப்பர் டூப்பர் ஹிட்டாகியதால் அவருடைய மார்க்கெட்டும் எகிறியது. நானும் ரெளடிதான், சேதுபதி, இறைவி, தர்மதுரை, கவண், விக்ரம் வேதா ஆகிய படங்களின் விஜய்சேதுபதியின் வெற்றிப்படங்கள் ஆகும்

கடந்த 2016ஆம் ஆண்டு ஆறு படங்களிலும், 2017ஆம் ஆண்டில் ஐந்து படங்களிலும் நடித்த விஜய்சேதுபதி தற்போது எட்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்து இவ்வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்திலும் விஜய்சேதுபதி முதன்முதலாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் திரையுலகில் வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் விஜய்சேதுபதி இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment