close
Choose your channels

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ் சிவன்!

Monday, September 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர்-பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை IndiaGlitz சார்பில் தெரிவித்து கொள்கிறோம்

காவல்துறை அதிகாரிகளின் பெற்றோர்களுக்கு மகனாய் பிறந்த விக்னேஷ் சிவன், மயிலாப்பூர் பள்ளி ஒன்றில் படிக்கும் போதிலிருந்தே சிம்புவுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் அடிப்படையில் 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் விக்னேஷ் சிவன். இந்த படம் பல தடைகளுக்கு பின்னர் வெளிவந்தாலும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' பட்டதாரி படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்து தனுஷின் நட்பை பெற்ற விக்னேஷ் சிவன், அவரது தயாரிப்பில் 'நானும் ஒரு ரெளடிதான்' படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் மாபெரும் வெற்றி அவரது திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் நாயகி நயன்தாராவின் நெருக்கமான நட்பும் கிடைத்தது. அந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'நானும் ரெளடிதான்' என்ற ஒரே படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட விக்னேஷ் சிவன், தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என இந்த இனிய நாளில் மீண்டும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment