வெற்றி மேல் வெற்றி கிடைக்க வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

முன்றே படங்கள் மட்டுமே இயக்கி, அதில் ஒன்றில் தேசிய விருது பெற்று, முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் வெற்றிமாறன் மட்டுமே. பெயரில் மட்டுமின்றி அவரது படங்களும் வெற்றி வாகை சூடி வரும் நிலையில் அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க IndiaGlitz-ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வெற்றிமாறனின் முதல் படம் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்'. முதல் படம் என்று நினைக்க முடியாத வகையில் இயக்கியிருந்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் வெற்றிமாறனின் இரண்டாவது படமான 'ஆடுகளம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது, சைமா விருது உள்பட பல விருதுகளை குவித்தது.

வெற்றி மாறனின் மூன்றாவது படமான 'விசாரணை' படம் வசூல் அளவில் வெற்றி பெற்றது மட்டுமின்றி சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதும் பெற்றது. அதுமட்டுமின்றி நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், கிஷோருக்கு சிறந்த எடிட்டர் விருதும் கிடைத்தது.

மேலும் ஆஸ்கார் செல்லும் இந்திய படங்களின் முதல் பட்டியலில் இந்த படம் இடம்பெற்றது. ஆனால் இரண்டாவது பட்டியலில் இடம்பெறாததால் ஆஸ்காருக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் இந்த படம் வெனிஸ் நாட்டின் விருது உள்பட பல விருதுகளை பெற்றது.

வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் தேசிய விருது உள்பட பலவிருதுகளை வென்று குவிக்க இந்த இனிய நாளில் வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒருமுறை எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

பிக்பாஸ்: நாடகக்காரி விருதை நாடகக்காரியிடம் இருந்து பெற்ற சுஜா

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70வது நாளை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு விருது வழங்கும் நடைபெறுவதாக இன்றைய புரமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு புதிய போட்டியாளர்கள் கிடைக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருகின்றனர்...

ஏழைகள் ஏழைகளாகவே சாகவேண்டுமா? அனிதா மரணம் குறித்து சிவகுமார்

நீட் தேர்வு காரணமாக தனது இன்னுயிரை நீத்து கொண்ட அனிதா குறித்தும், இன்றைய கல்விமுறை, நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்தும் நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் முக்கியம். விஜய்சேதுபதி

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் மரணத்திற்காக சென்னை லயோலா கல்லூரியில் 'அனிதா நினைவேந்தல்' கூட்டம் நடைபெற்றது.

இது இன்னொரு சுதந்திர போராட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஆவேசம்

மருத்துவ படிப்பின் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் துயர முடிவு தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆத்திரம் கொள்ள வைத்த நிலையில் கமல்ஹாசன் போன்ற சமூக சிந்தனையுடன் மக்கள் மீது நல்ல அக்கறை கொண்டவர்களுக்கு இருமடங்கு ஆத்திரம் எழுந்துள்ளது...