இந்த ஆண்டிற்குள் நம்பர் ஒன் இடம்? வரலட்சுமியை தேடி வரும் வாய்ப்புகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு முதலில் IndiaGlitz சார்பில் மனங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் படமான 'போடா போடி' படம் தான் வரலட்சுமிக்கும் முதல் படம். அந்த படத்தின் வெற்றி சிம்பு, வரலட்சுமி, விக்னேஷ் சிவன் மூவருக்குமே திருப்புமுனையை கொடுத்தது. இருப்பினும் வரலட்சுமியின் முழு நடிப்புத்திறமை வெளிவந்தது பாலாவின் 'தாரை தப்பட்டை திரைப்படம்தான். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை குவிக்கவில்லை என்றாலும் வரலட்சுமிக்கு எதிர்பாராத வாய்ப்புகள் குவிந்தன. இன்றைய நிலையில் ஒரே நேரத்தில் ஒன்பது படங்களில் நடித்து வரும் ஒரே நடிகை வரலட்சுமி தான் என்றால் அது மிகையாகாது.
இன்றைய பிறந்த நாள் பரிசாக தளபதி விஜய்யின் 'தளபதி 62' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்றுமுன் அவர் இதனை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த படம் போக வரலட்சுமி நடித்து வரும் படங்கள் என்னவெனில் விஷாலின் சண்டக்கோழி, கவுதம் கார்த்திக், கார்த்திக் இணைந்து நடிக்கும் Mr.சந்திரமெளாலி, தனுஷின் 'மாரி 2', சத்யராஜின் 'எச்சரிக்கை', ஜெய்யின் 'நீயா 2', சரத்குமாரின் 'பாம்பன்,' விமலின் 'கன்னிராசி, மற்றும் 'ஷக்தி 'ஆகிய ஒன்பது படங்களில் நடித்து வருகிறார்.
இந்த ஒன்பது படங்களும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாதி படங்கள் வெற்றி பெற்றாலே வரலட்சுமி நம்பர் ஒன் இடத்தை நெருங்கிவிடுவார் என்று கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments