வைகை புயலுக்கு வாழ்த்துக்கள்: இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலக வரலாறு எழுதினால் அதில் வடிவேலுவை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. அந்த அளவுக்கு சினிமா நகைச்சுவையில் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மீம்ஸ்களாக இருக்கட்டும், நகைச்சுவை வீடியோவாக இருக்கட்டும், அரசியல் நையாண்டி கருத்துக்களாக இருக்கட்டும், எல்லாவாற்றுக்கும் கண்டெண்ட் கொடுப்பவர் வடிவேலுதான். அவரில்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் எந்த ஒரு மீம்ஸையும் கிரியேட் பண்ண முடியாது. அந்த வகையில் நகைச்சுவையின் மொத்த வடிவமாக இருக்கும் வடிவேலு அவர்களுக்கு நமது உளங்கனிந்த பிறந்த வாழ்த்துக்கள்
நகைச்சுவை சூப்பர் ஸ்டாராக இருக்கும் வடிவேலுவை கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை. அவரை பயன்படுத்தாமல் இருந்தால் தமிழ் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் தான் பாதிப்பே அன்றி, அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒருசில அரசியல் காரணங்களால் பிரேக் விழுந்த அவரது நடிப்பு மீண்டும் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
கமலஹாசனின் ’தலைவன் இருக்கிறான்’ உட்பட ஒரு சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கும் நிலையில் அவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com