உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்த 'பீஸ்ட்': ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் வைக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் தெரிந்தது. இன்று விஜய் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையில் டுவிட்டர் ஸ்பேசஸ் தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் விஜய்யின் டுவிட்டர் பக்கமும் இடம் பெற்று இருந்ததால் விஜய் பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் பலரும் அந்த ஸ்பேசஸ் பக்கத்தில் இணைந்து காத்திருந்தனர்

இதனால் ஒருசில நிமிடங்களில் ‘ஹாப்பி பர்த்டே தளபதி’ என்ற அந்த டுவிட்டர் ஸ்பேசஸ்-இல் 27 ஆயிரத்து 507 பேர் பங்கேற்றனர். இதனையடுத்து ஹாப்பி பர்த்டே தளபதி ஸ்பேசஸ் பக்கம் உலகளவில் அதிகம் பேர் பங்கேற்ற ஸ்பேசஸ் பட்டியலில் 2வது இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதிவரை நடிகர் விஜய் ஸ்பேசஸ் பக்கத்தில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.