மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

எந்தவித திரையுலக பின்னணியும் இன்றி தானாகவே சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் பிசியான நாயகர்களில் ஒருவராக இருந்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இராஜபாளையம் மண்ணின் மைந்தனான விஜய்சேதுபதி சென்னைக்கு திரையுலக கனவுடன் வந்து முறைப்படி பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று பின்னர் திரையுலகில் நுழைந்தார். முதலில் ஹீரோக்களுக்கு நண்பனாக ஒருசில படங்களில் நடித்த விஜய்சேதுபதி பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒருசில குறும்படங்களில் நடித்தார். அதன் பின்னர் 'வெண்ணிலா கபடிக்குழு', 'நான் மகான் அல்ல' போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்த விஜய்சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் சீனுராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று'. இந்த படத்தின் வெற்றியால் கோலிவுட் திரையுலகில் ஒரு நாயகனாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும்' போன்ற படங்கள் விஜய்சேதுபதியை வெற்றி நாயகன் ஆக்கியது. கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'நானும் ரெளடிதான்' படத்தின் மிகப்பெரிய வெற்றி விஜய்சேதுபதியை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு கொண்டு சென்றது.

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அதற்கும் மேல் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிக படங்கள் மட்டுமின்றி வெற்றி படங்களாக கொடுத்து வரும் விஜய்சேதுபதிக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.

More News

நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமை அடைகிறேன். த்ரிஷாவின் உணர்ச்சிமிகு கடிதம்

கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தள பயனாளிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர். த்ரிஷாவின் சமூக வலைத்தள பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு அதில் த்ரிஷா கூறாத கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன...

இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி பொங்கல் திருவிழா படமாக சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்தபோதிலும் ஓப்பனிங் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக சென்னை வசூல் 'தெறி' படத்தை அடுத்து மிக அதிகமாக வசூல் செய்த விஜய் படங்களில் இரண்டாவது பெரிய ஓப்பனிங் வசூல் என்ற பெருமையை பெற்றது.

படப்பிடிப்பில் எல்லை மீறுவது வருந்ததக்கது. நடிகர் சங்கம் அறிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோலிவுட் திரையுலகில் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

த்ரிஷாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு

இந்நிலையில் த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய டுவீட்டுக்களை சிலர் பதிவு செய்து வருவதாகவும், அந்த டுவீட்டுக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பதமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்...

டுவிட்டரில் ஆவேசம் அடைந்த த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பினர் சிலர் சமீபத்தில் த்ரிஷா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் போராட்டம் செய்ததோடு அவரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்...