தல தோனி: கூல் கேப்டனுக்கு ஒரு கூலான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்று அழைக்கப்படுபவரும் தனது ரசிகர்களால் அன்புடன் தல என்று அழைக்கப்படுபவருமான தோனியின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் விளையாடி கொண்டிருப்பதால் இங்கிலாந்தில் சக வீரர்கள் மற்றும் குடும்பத்துடன் தோனி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்ற தோனி, இந்திய அணி நெருக்கடியில் இருக்கும்போதெல்லாம் காப்பாற்றி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர். தோனி கடைசி வரை நின்ற போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது அரிதினும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு உலகின் மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்ற பெயரை பெற்றவர்
இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே வெற்றி கேப்டன் நம்ம தல தோனி என்ற பெருமை உள்ளது. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் இந்த போட்டி தோனியின் 500வது போட்டி என்ற வகையில் தோனிக்கும் இந்திய அணிக்கும் இதுவொரு ஸ்பெஷல் போட்டி ஆகும்.
தோனியின் பிறந்த நாளை அடுத்து அவருக்கு சக வீர்ர்களும் பிரபலங்களும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்
சச்சின்: 500வது போட்டியில் விளையாடவிருக்கும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கிரிக்கெட் ரசிகர்களும், உங்களை சுற்றி இருப்பவர்களும் உங்களால் மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றார்கள். இது தொடரட்டு
சேவாக்: பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. இந்த ஸ்ட்ரெச்சைவிட உங்கள் ஆயுள் மிக நீளமானதாக இருக்க வேண்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக மகிழ்ச்சியை அனைத்திலும் பெற வேண்டும். ஓம் ஃபினிஷாய நமஹா
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி: ``இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. இந்தியாவுக்காகத் தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும்''
சுரேஷ் ரெய்னா: ஒரு சிறந்த நாளில் 500-வது சர்வதேசப் போட்டியில் களமிறங்க உள்ளீர்கள். இது இந்தியாவுக்கு அருமையான நாள். பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா. நீங்கள்தான் என்றுமே என் உத்வேகம்
அனிருத்: மாஸ் என்ற வார்த்தைக்கு பொருத்தமான தோனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மேலும் நடிகை கஸ்தூரி, இயக்குனர் வெங்கட்பிரபு, முகம்மது கைஃப், ஐசிசி, பிசிசிஐ உள்பட பலர் தோனிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments