'உள்ளத்தை அள்ளித்தந்த' சுந்தர் சி-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Sunday,January 21 2018]

கோலிவுட் திரையுலகில் காமெடி, ஆக்சன் உள்பட பல பரிணாமங்களில் வெற்றி படங்களை இயக்கிய சுந்தர் சி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் வகையில் அவருக்கு IndiaGlitz சார்பில் எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

'முறைமாமன்', 'முறை மாப்பிள்ளை' ஆகிய படங்களை சுந்தர் சி முதலில் இயக்கியிருந்தாலும், அவர் இயக்கத்தில் கார்த்திக், ரம்பா நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி தான் அவருக்கு ரஜினி நடித்த 'அருணாச்சலம்' படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தது.

ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் அன்பே சிவம், சரத்குமார் 'ஜானகிராமன்', என பெரிய ஸ்டார்களை மட்டுமின்றி காமெடிக்கு முக்கியத்துவம் தரும் சின்ன பட்ஜெட் படங்களும் சுந்தர் சி-க்கு கைவந்த கலை. குறிப்பாக விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' , சித்தார்த், ஹன்சிகா நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது சுந்தர் சி, 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

மேலும் இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' என்ற படத்தையும் சுந்தர் சி இயக்க திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணியை செய்து வருகிறார். இந்த படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

'அருவி' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா

கோலிவுட் திரையுலகில் சமீபகாலமாக தரமான மற்றும் வெற்றி படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்நிறுவனம் சமீபத்தில் தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் '

சூர்யா குறித்த விமர்சனம்: சன் டிவிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

சன் டிவிக்கும் நடிகர் சங்கத்திற்கும் நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. சமீபத்தில் நடந்த நட்சத்திர விழாவில் சன் டிவி ஒரு பெரிய தொகையை நடிகர் சங்க கட்டிட நிதியாக வழங்கியது.

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்?

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி முடிந்து இந்த படம் சென்சாரில் 'யூ' சான்றிதழும்

பிப்ரவரி 2 முதல் கணக்கை தொடக்கும் விஜய்சேதுபதி

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக திரைப்படங்களை வெளியிட்டு அவற்றில் பல வெற்றி படங்களையும் கொடுத்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தனது கணக்கை தொடங்குகிறார்

சமூக போராளிகளின் கையினால் விருதினை பெற்ற சத்யராஜ்

சத்யராஜ் அவர்களுக்கு விகடன் நிறுவனம் சிறந்த குணசித்திர விருதினை வழங்கியது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது சிறப்பான நடிப்பினால் முத்திரை பதித்த சத்யராஜூக்கு இந்த விருது வழங்கப்பட்டது.