சிரிப்பழகி சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

கே.ஆர்.விஜயாவுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயர் நடிகை சினேகாவுக்கு மட்டுமே பொருத்தமாக இருந்தது. அவரது புன்னகை கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிரிப்பழகி சினேகாவுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் சினேகா கிட்டத்தட்ட முக்கிய நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துவிட்டார். கமல்ஹாசனுடன் வசூல் ராஜா' எம்பிபிஎஸ் மற்றும் 'பம்மல் கே.சம்பந்தம்' ஆகிய படங்களில் சினேகா நடித்துள்ளார். குறிப்பாக 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் ஒரு டாக்டராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதேபோல் ரஜினிகாந்த் நடித்த 'குசேலன்' படத்தில் இடம்பெற்ற 'சினிமா சினிமா' என்ற பாடலில் ஒரே ஒரு காட்சியில் தோன்றுவார் சினேகா.

அஜித்துடன் 'ஜனா' படத்திலும் விஜய்யுடன் 'வசீகரா' படத்திலும் நடித்த சினேகா விக்ரமுடன் 'கிங்', சூர்யாவுடன் 'உன்னை நினைத்து, தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்' படங்களிலும் நடித்துள்ளார்.

சினேகாவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவருக்கு புகழை பெற்று கொடுத்த படங்களாக 'பார்த்திபன் கனவு, 'புன்னகை தேசம்', 'ஏப்ரல் மாதத்தில்', 'பள்ளிக்கூடம்', 'பிரிவோம் சந்திப்போம்', ஆகிய படங்களை கூறலாம். குறிப்பாக சேரன் இயக்கத்தில் சினேகா நடித்த 'ஆட்டோகிராப்' திரைப்படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது

திருமணத்திற்கு பின்னர் அதிக படங்களில் சினேகா நடிக்கவில்லை என்றாலும் கடந்த ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் சினேகா நடித்திருந்தார். இதே போல் இன்னும் அவர் சிறப்பான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று இன்றைய பிறந்த நாளில் அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

 

More News

ரஜினியுடன் இயக்குனர் மகேந்திரன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முறுக்கு மீசையுடன் ரஜினியின் இளமை தோற்றத்து காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

சின்மயி-வைரமுத்து விவகாரம்: கருத்து சொன்ன கமல்ஹாசன்

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சின்மயியை தொடர்ந்து

சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னையில் பிரபலமான ஐஏஎஸ் அகடாமி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சங்கரன் என்பவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஆண் தேவதை' ரிலீசில் திடீர் சிக்கல்? நாளை வெளிவருமா?

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆண் தேவதை'.

'சீதக்காதி' சிங்கிள் ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் இன்னொரு திரைப்படமான 'சீதக்காதி' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.