'தல'யின் 'தலைவி ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் தலைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz அவருக்கு உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் நாயகியாக விஜய்யுடன் 'காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அஜித்துடன் 'அமர்க்களம்', மாதவனுடன் 'அலைபாயுதே போன்ற ஒருசில படங்களில் மட்டுமே நடித்த ஷாலினி, 'அமர்க்களம்' படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்துடன் காதல் கொண்டார். இந்த காதல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஷாலினி ஒரு பேட்டியில் கூறியபோது, '`அமர்க்களம்’ படத்தில் அஜித் எனக்கு ஹீரோனு சொன்னப்போ `அப்படியா’னு சாதாரணமா நினைச்சேன். ஒரே மாசம்தான்... அவர்தான் என் உலகம்னு சரணடைஞ்சுட்டேன். அப்பதான் காதல் என்பது ஒரு இலக்கு அல்ல, அது வாழ்க்கையின் ஆரம்பம்தான் என்பதை நான் புரிந்து கொண்டேன்' என்று கூறியுள்ளார்
அஜித்-ஷாலினி காதல் தம்பதிக்கு திருமணம் ஆகியவுடன் வந்த முதல் காதலர் தினம் வித்தியாசமானது. அன்றைய தினம் ஒரு முக்கிய படப்பிடிப்பிற்காக அஜித் கோவை செல்ல வேண்டியதிருந்தது. ஷாலினியிடம் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறி உட்கார்ந்திருக்கின்றார் அஜித். அப்போது விமான பணிப்பெண் ஒருவர் ஒரு பரிசை கொடுக்கின்றார். ஆச்சரியத்துடன் அஜித் அதை வாங்கி பிரித்தபோது தான், அது ஷாலினியின் ஏற்பாடு என்று தெரிந்தது. அந்த பரிசுப்பெட்டியில் ஷாலினியுடன் அஜித் எடுத்த மிகச்சிறந்த புகைப்படங்கள் இருந்தது. கோவை இறங்கியதும் அஜித், தனது மனைவியிடம் உருகி உருகி நன்றி சொன்னாராம்
படப்பிடிப்பு காரணமாக பெரும்பாலான நேரம் அஜித் வீட்டில் இருக்க மாட்டார் என்பதால் குழந்தைகளை கவனித்து கொள்ளும் பெரும் பொறுப்பு ஷாலினிக்குத்தான். குழந்ததகளுக்கு நல்ல குணங்களை கற்று கொடுப்பதில் இருவருமே தீவிர கவனம் எடுத்து வருகின்றனர். குறிப்பாக வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும் குணம் தங்கள் மகளுக்கு இருக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தனர். வீட்டுக்கு யார் வந்தாலும், அனோஷ்கா 'வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி' என்று கூப்பிட்டு நலம் விசாரிப்பாராம். பிறரை மதிக்கும் பழக்கத்தை முதலில் குழந்தைகளிடத்தில் இருக்க வேண்டும் என்பதில் இருவரும் மிகவும் உறுதியாக இருப்பது மற்ற பெற்றோர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்
ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்ற மொழிக்கேற்ப, தல அஜித்தின் வெற்றிகளுக்கு பின்னணியாக இருந்து வரும் தல'இன் தலைவிக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com