ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல' என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்துக்கு இன்று பிறந்த நாள். இன்றைய நாள் அவருக்கு இனிமையான நாளாக அமைய நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாலினி, தமிழில் சிவாஜிகணேசன் நடித்த 'பந்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் பிள்ளை நிலா, விடுதலை, நிலவே மலரே, சங்கர் குரு உள்பட பல படங்களில் நடித்த ஷாலினி, பின்னர் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் நாயகியாக கடந்த 1997ஆம் ஆண்டு ரீ-எண்ட்ரி ஆனார்.
இதன்பின்னர் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் ஷாலினி நடித்தார். இதில் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகர் அஜீத்துடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷாலினி அஜித்துக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com