ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிப்பு, சினிமா என்றால் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஷாலினி தனது குழந்தைத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜூன் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பின்னர் ஒரு இடைவெளிக்கு பின்னர் இளையதளபதி விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் தமிழில் நாயகி ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து கோலிவுட்டின் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார். மீண்டும் விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு', அஜித்துடன் 'அமர்க்களம்', மணிரத்னம் இயக்கத்தில் 'அலைபாயுதே', போன்ற படங்கள் ஷாலினியின் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
இந்த நேரத்தில் அமர்க்களம்' படத்தில் நடித்தபோது அஜித்துடன் காதல் ஏற்பட்டது. அஜித், ஷாலினி இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருப்பினும் இருமனங்கள் ஒன்றாகியதால் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா, ஆத்விக் ஆகிய குழந்தைகள் உள்ளன.
ஷாலினி அஜித் திருமணத்திற்கு பின்னர் நடிப்பை கைவிட்டாலும் அவர் ஒரு நல்ல டென்னிஸ் வீராங்கனை. மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கின்றார் என்ற சொல்லிற்கேற்ப அஜித்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக் இருந்து வரும் ஷாலினி அஜித்துக்கு மீண்டும் நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments