பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாயிஷா

  • IndiaGlitz, [Sunday,August 12 2018]

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்ற நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இயக்குனர் விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தில் சாயிஷா அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சாயிஷாவின் நடிப்பு மற்றும் நடனம் பெரிய அளவில் பேசப்பட்டதால் அவருக்கு கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' ஜுங்கா' மற்றும் 'கஜினிகாந்த்' ஆகிய மூன்று படங்களின் நாயகியாக சாயிஷா நடித்திருந்தார். இந்த மூன்று படங்களின் ஹாட்ரிக் வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தற்போது அவர் சூர்யாவின் 37வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாயிஷாவின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சாயிஷா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட் திரையுலகில் சாயிஷா யாரும் அடையாத உச்சத்தை அடைய வேண்டும் என்று இந்த இந்த பிறந்த நாளில் அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவரை அழைத்து செல்லும் கமல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் செண்ட்ராயன், ஜனனி ஐயர், மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் இருந்தனர்.

ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் 50வது படம் என்ற இலக்கை எட்டிய ஒருசில நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டில் அறிவிப்பு அவருடைய பிறந்த நாளில் அறிவிக்கப்படும்

கேரள மக்களுக்கு கமல் செய்த பேருதவி

கேரளாவின் பல பகுதிகளில் தற்போது வெள்ளத்தால் மூழ்கி அம்மாநில மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 20 பேர் பலியாகியது மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் டைட்டில்

பிரபல இயக்குனர் மகேந்திரன் விஜய் நடித்த 'தெறி' படத்திற்கு பின்னர் அவ்வப்போது கோலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் மகன் சென்ற கார் விபத்து: பரபரப்பு தகவல்

நடிகர் விக்ரம் மகன் துருவ் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் 'உருவாகி வரும் 'வர்மா' என்ற படத்தில் நடித்து வருகிறார்