பிறந்த நாள் வாழ்த்துக்கள் சத்யராஜ்
- IndiaGlitz, [Tuesday,October 03 2017]
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக பதவியுயர்வு பெற்றவர்கள் ரஜினிகாந்த் போன்று ஒருசிலரே. அவர்களில் ஒருவராகிய புரட்சித்தமிழன் சத்யராஜ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை IndiaGlitz தெரிவித்து கொள்கிறது.
கமல்ஹாசன் நடித்த 'சட்டம் என் கையில்' என்ற படத்தில் வில்லனாக அறிமுகமான சத்யராஜ் அதன்பின்னர் மூன்று முகம், பாயும் புலி, தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள், தம்பிக்குஎந்த ஊரு, எனக்குள் ஒருவன், காக்கி சட்டை, போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தார். வித்தியாசமான வசனம் பேசும் பாணி, அசத்தலான உடல்மொழி ஆகியவற்றால் சத்யராஜின் வில்லத்தனம் தனித்தன்மை பெற்றது. குறிப்பாக அவர் பேசிய 'தகடு தகடு, ''என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறிங்க' போன்ற வசனம் சத்யராஜின் டிரேட்மார்க் பாணி.
வில்லனாக பல திரைப்படங்களில் நடித்த சத்யராஜ் முதல்முறையாக நெகட்டிவ் ஹீரோவாக 'சாவி' என்ற படத்தில் நடித்தார். பின்னர் பாரதிராஜாவின் 'கடலோர கவிதைகள்' படத்திற்கு பின்னர் முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். இந்த படம் அவரது திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.