ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Thursday,September 15 2016]

'படையப்பா' நீலாம்பரி முதல் 'பாகுபலி' சிவகாமி வரை தனது வித்தியாசமான, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
ஒரு நடிகை ஐந்து வருடம் திரையுலகில் இருப்பதே பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் 30ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்திய திரையுலகில் ஜொலித்து வரும் ரம்யாகிருஷ்ணன் இன்றளவும் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர்
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு, மற்றும் பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
தென்னிந்திய திரையுலகில் இன்னும் பல வெற்றிகளை ரம்யா கிருஷ்ணன் குவிக்க இந்த பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

உதயநிதியின் அடுத்த பட டைட்டில் இதுதான்

'மனிதன்' வெற்றிக்கு பின்னர் உற்சாகமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்...

கிடாரி'யை அடுத்து சசிகுமாரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சசிகுமார், நிகிலா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கிடாரி' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சசிகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

காவிரி பிரச்சனை குறித்த கமல் கூறிய கவலையான கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார்...

'இருமுகன்' படத்தின் ஆறு நாள் வசூல் நிலவரம்

சீயான் விக்ரம் நடிப்பில் ஆனந்த்சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைபடம் கடந்த 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது...

சூர்யா -35 படத்திற்கு விஜய்சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?

நடிகர் சூர்யாவின் 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...