பிறவிக்கலைஞன் ராதாரவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Saturday,July 29 2017]

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசும், பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகருமான ராதாரவிக்கு இன்று பிறந்த நாள். எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஊதித்தள்ளும் ஒரு முழுமையான பிறவிக்கலைஞனுக்கு இந்த பிறந்த நாள் இனிய நாளாக அமைய நமது நல்வாழ்த்துக்கள்.

ராதாரவி திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1976ஆம் ஆண்டே அவர் சில படங்களில் நடித்து வந்தாலும், அவருக்கு பேர் சொல்லும் வகையில் அமைந்த முதல் படம் கே.பாலசந்தரின் 'தண்ணீர் தண்ணீர்' படம் தான். அரசியல் நையாண்டி படமான இந்த படத்தில் அவர் சரிதாவின் கணவராக நடித்திருந்தார். ராதாவிக்கு அழுத்தமான வசனங்கள் கொடுத்ததுடன் அவர் நடிகவேளின் வாரிசு என்பதை நிரூபிக்க வைக்க எடுத்த கே.பாலசந்தரின் முயற்சி வெற்றியை தேடித்தந்தது.

ஆரம்பகாலத்தில் குணசித்திர வேடங்களில் நடித்த ராதாரவி பின்னர் ரஜினி, கமல் படங்கள் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றார்.

உயிருள்ளவரை உஷா, வைதேகி காத்திருந்தாள் , உயர்ந்த உள்ளம் , சின்னத் தம்பி , பூவெளி , உழைப்பாளி, குரு சிஷ்யன், வீரன் வேலுத்தம்பி என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். சமீபத்தில் வெளியான உதயநிதியின் 'மனிதன்' படத்தில் அவரது நடிப்பு அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றால் அது மிகையாகாது.

திரைப்படத்தில் மட்டுமின்றி 'திருவிளையாடல்', 'செல்லமே', ரங்க விலாஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் ராதாரவி நடித்துள்ளார். மேலும் ஓரிரண்டு படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடித்த நடிகர் ஜெயபாலனுக்கு டப்பிங் குரல் கொடுத்தது ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்ட ராதாரவி ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தாலும் ஜெயலலிதாவின் அதிமுகவில் இணைந்தார். அவர் கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

நடிகர் சங்கத்தின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் பணியாற்றிய ராதாரவி கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஷால் அணியால் தோற்கடிக்கப்பட்டார். இருப்பினும் தேர்தலுக்கு பின் விஷால் அணியினர்களுடன் சமாதானம் ஆகியதோடு, விஷாலுடன் 'மருது' படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் பல வெற்றிகள் பெற்ற ராதாரவி, இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று அவருக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

ஓவியாவை அசிங்கப்படுத்துகிறதா பிக்பாஸ் டீம்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை விட, அந்த தொலைக்காட்சியை விட அதிகமாக பேசப்படுவது ஓவியாதான். ஓவியாவுக்கு கிடைத்துள்ள இந்த எதிர்பாராத புகழ் பிக்பாஸ் குழுவினர்களே எதிர்பாராத ஒன்று...

கமல்ஹாசன் மகள் மதம் மாறிவிட்டாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு பகுத்தறிவாதி என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை மட்டுமின்றி ஜாதி, மதம் ஆகியவைகளுக்கும் அவர் எதிரானவர்.

'தங்கமகன்' தனுஷின் வியக்க வைத்த கேரக்டர்கள்: பிறந்த நாள் ஸ்பெஷல்

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல அவதாரங்களை இந்த 30+ வயதுக்குள் ஒரு இளைஞர் எடுத்துள்ளார் என்றால் அதுதான் தனுஷ். கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால்பதித்து தனது முத்திரையை பதித்துள்ள தனுஷூக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இப்ப வரைக்கும் வரவில்லை: இனிமே வர வச்சிடாதிங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய விஸ்வரூப எழுச்சி, அவர் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் 'அரசியலுக்கு இன்று வரை நான் வரவில்லை, ஆனால் வரவழைத்துவிட வேண்டாம்' என்று தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்....

சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் சென்சார் தகவல்கள்

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது...