ஆர்ஜே பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து, இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்ஜே பாலாஜி, இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தனியார் எப்.எம் வானொலி ஒன்றில் ஆர்ஜேவாக பணியாற்றிய பாலாஜி, டேக் இட் ஈஸி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முகத்தை வெளிக்காட்டாமல் தனது குரல் திறமையை வைத்து மட்டுமே நேயர்களின் மனதை கவர்ந்த பாலாஜி, பின்னர் சின்னத்திரையில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' மற்றும் 'ஒய் திஸ் கொலைவெறி' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஆர்ஜே பாலாஜி சுந்தர் சி இயக்கிய 'தீயா வேலை செய்யணும்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருடைய நகைச்சுவைக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். வடகறி, இது என்ன மாயம், யட்சன், ஆகிய படங்களில் நடித்த பாலாஜிக்கு ஹைட்லைட்டாக அமைந்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'நானும் ரெளடிதான்' மற்றும் 'தேவி' திரைப்படங்கள் தான். தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர் உள்பட 7 படங்களில் நடித்து பிசியான நடிகராக கோலிவுட்டில் வலம் வருகிறார்.
நடிகராக மட்டுமின்றி சமூக சேவைகளிலும் பாலாஜி ஈடுபாடு கொண்டவர். சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தபோது பொதுமக்களை காப்பாற்றிய தொண்டுள்ளம் கொண்டவர்களில் முக்கியமானவராக பாலாஜி திகழ்ந்தார். மேலும் மெரினாவில் புரட்சி ஏற்படுத்திய 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களை வழிநடத்தியவர்களில் ஒருவர் பாலாஜி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்றைய புதுவை கவர்னர் கிரண்பேடி 'ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், சுப்ரீம் கோர்ட் அதனை தடை செய்தது சரி என்றும் கூறியபோது, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி, 'நான் குஜராத் சென்றிருந்தபோது அங்கே ஓட்டங்கள் மீது கடும் சுமை கொண்ட மூட்டைகள் சுமக்க வைக்கப்படுகின்றது, அது சித்தரவதை இல்லையா.?, அதை தடை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கிரண்பேடி, கோர்ட் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறியபோது உடனே குறுக்கிட்ட பாலாஜி, சரி நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். தமிழகத்திற்கு தண்ணீர் தர சொல்லி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது, ஆனால் ஒரு மாநிலம் கோர்ட் உத்தரவை ஏற்க மறுக்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, 'நீங்க காலில் போட்டிருக்கும் செருப்பு லெதர், எதில் இருந்து வந்தது? மாட்டை அறுத்து அதன் தோளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள். அது சித்தரவதை இல்லையா... என்று உணர்ச்சிபெருக்குடன் பேசி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
இவ்வாறு நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறையுடனும் உள்ள ஆர்ஜே பாலாஜி சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த குடிமகனாகவும் தொடர இன்றைய பிறந்த நாளில் மீண்டும் அவருக்கு நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com