பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைக்குடும்பத்தில் பிறந்த கங்கை அமரன் அவர்களின் மகனும், 'மங்காத்தா' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயற்றிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நமது சார்பில் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
'கண்டநாள் முதல்', வல்லவன்' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், சகோதரர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தில் சீனு என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் இடம் பிடித்தவர் பிரேம்ஜி. 'என்ன கொடுமை சரவணன்' என்ற வசனத்தை இன்றளவும் பலர் பயன்படுத்த பிரேம்ஜியே காரணம்.
மேலும் சந்தோஷ் சுப்பிரமணியம்', சரோஜா',. கோவா', மங்காத்தா, சேட்டை உள்பட பல படங்களில் காமெடி வேடம் ஏற்று ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
இளையராஜா, கங்கை அமரன் என்ற இசைக்குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜிக்கு ரத்தத்திலேயே இசை உள்ளதால் நடிப்பு மட்டுமின்றி ஒருசில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளிவந்த 'அச்சமின்றி' நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லூசுப்பெண்ணே, விளையாடு மங்காத்தா உள்ளிட்ட பல பாடல்களை ரீமிக்ஸ் செய்தும் பாராட்டு பெற்றவர் பிரேம்ஜி.
நடிப்பு, இசை என இரண்டு துறையிலும் இன்னும் பல சிகரங்களை அடைந்து பிரேம்ஜி வெற்றிகள் பல குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments